Sunday, April 26, 2009

பெண்ணின் மதிப்பு

மதி அவர்களின் வலைப்பதிவில் என்னுடைய பின்னூட்டம் இதை இந்த பதிவில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்கும் என்றெண்ணி இதில் அதையும் இணைத்துள்ளேன்.


எங்களை மதியுங்கள்.. பாதுகாப்பு தாருங்கள்.. யாரிடம் கேட்குறீங்க..? என்னைப் பொறுத்த வரை ‘வன விலங்கு ‘ வாரம்.. ‘சுற்றுச் சூழல்' நாள்.. இது போன்ற நாட்கள் கொண்டாடுவதற்கு காரணம் இவை எல்லாம் மறந்து மறைந்து வருவதுதான். மகளிரும் இதில் அடங்குவதுதான் பெரும் கொடுமை! உயிர் ஜனிக்க உதிரம் கொடுத்து தன் வாழ்வின் விருப்பு வெறுப்புகளை விழுங்கி, புகுந்த வீட்டிற்கேற்றார் போல் மாற்றி, பிறந்த வீட்டையும் மறக்காமல், பிள்ளைகளின் வாழ்வை அமைத்து, குடும்பத்திற்காகவும் உழைத்து (வீட்டிலும் வெளியிலும்) இப்படி யார் எது சொன்னாலும் சக்தி மிகுந்திருந்தும் 'சிவனே' என்று கேட்டு பூரித்து போய் உயிருள்ள சிலையாய் நின்று குலம் காக்கும் தெய்வங்களான பெண்களை என்னவென்று சொல்வது.? முதலில் அவர்களுக்கு தங்களிடமிருக்கும் தன்'நம்பிக்கை'யை அறிய வேண்டும். அதற்காக கண்மூடித்தனாமாக அதிக நம்பிக்கையும் கூடாது. இரு கைகள்தான் நல்ல ஓசை எழுப்பும். தனிஞ்சு போனாலும் துணிஞ்சு நிக்கணும்.. பணிஞ்சு போனாலும் பயந்து போகக்கூடாது.. 'பெண்ணாக பிறக்க வில்லையே' என்று எண்ணும் ஆண்களில் ஒருவனாக இதை சொல்கிறேன்.இன்றும் ‘படித்தவர்' களில் பெரும்பாலானவர்கள் கூறும் கூறிய சொற்கள் குழந்தை பிறந்தவுடன் ‘அட பொண்ணா ?' அல்லது ‘பையனா - very good' இவர்கள் யார் சான்றிதழ் கொடுக்க.? இது போன்ற கேள்விகளையும் கருத்துகளையும் தங்கள் வீட்டில் வளரும் பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டே கூறுவதுதான் மகா கொடுமை. இத இத்தோட நிறுத்திக்கறேன் இல்லன்னா என் புலம்பலும் நிக்காது. ஆத்திரம் அடங்காது. அட இந்த சமூகத்தின் மேல்தான் ..!
http://madhiwrites.blogspot.com/2009/03/blog-post_08.html

http://madhiwrites.blogspot.com/2009/03/blog-post_08.html

No comments: