மீசை முத்தம் கொடுக்கட்டுமா?
உன் ஆசை மொத்தமும் கொள்ளட்டுமா?
முத்தம் கொடுக்க நான் வந்தால்
ஆசை வழிந்து ஓடிடுமா?
அங்கம் மொத்தம் தங்கம் மின்ன
சிங்கம் போல வந்து அதை நான் கொள்ள
துள்ளும் மானாய் உன் நானம் விட்டோட
என் உதட்டின் மென்மையை
உன் பெண்மை உணர
உன் விழிக்குள் தெரியும்
உலகம் வியப்பில் ஆழ்த்தும்
வழியில் வந்த குழிக்குள் விழுந்த
குழலை விரல் மீட்டும்
வீணையின் நாதம்
ஒலியின்றி உயிருக்குள் பாயும்
சொர்க்கத்தை இமையின் அருகில்
கண்டது போல் இருக்கும்.
விரகம் என் மூச்சு காற்றில் கலந்து
ஊற்றாக உன் முகத்தில் பட்டு
துணி மூடாத உன் நெஞ்சின் நுனி பட்டு
தெரித்து இடையோடு வழிந்தோடும்.
உன் சித்தம் கலங்க முத்தம் கொடுக்க
வித்தை காட்டும் முனிவன் கிடையாது
என் இதழின் ஈரம்
உன் உதட்டின் ஓரம் பட்டு
சேதாரமில்லாமல் சிலவற்றை உறுஞ்சி
மோகத்தில் முங்கி குளிக்கும்
காதல் வழியும் காமம்
நிரப்பும் கணவன் நான்.
கட்டளை இட்டு காட்டச் சொல்லும்
அரச மனம் எனக்கில்லை
கனைகளை தொடுத்து காதல் செய்யும்
காமனும் நானில்லை
உணர்வு வரும் உணர்ச்சி வரும்
அதனுடன் கூடிய மகிழ்ச்சி வரும்
புணர்ச்சியுடன் கிளர்ச்சி செய்யும்
புரட்சிகாரனும் நானில்லை
மனதை வருடி மயக்கம் கலைப்பாயடி
உன் உறக்கம் கொடுத்து
என்னை விழிக்க வைப்பாயடி
உடலை உடலால் உரசி
அந்த ரகசியத்தை பேசி
என்னை உனக்குள் ஊற்றடி
நீ எனக்குள் உறையும் காற்றடி
நான் உனக்குள் கரையும் பனியடி
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment